
புதிய நீர் இணைப்பு கட்டணங்கள் அதிகரிப்பு
புதிய நீர் இணைப்பு வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை நேற்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கட்டணம் சுமார் 70 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய நீர் இணைப்புகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள மூலப்பொருட்களின் விலை மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக புதிய நீர் இணைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
