
புதிய நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் வெளியிடப்பட்டது
தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சியை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவியேற்ற அனுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
2020 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்குகளில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து அடுத்த இடத்தில் இருந்த லக்ஷ்மன் நிபுன ஆராச்சி நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி http://documents.gov.lk/files/egz/2024/9/2403-01_E.pdf
