
புதிய திருத்தந்தை 14ஆம் லியோவின் முதலாவது திருப்பலி இன்று
புதிய திருத்தந்தை 14ஆம் லியோ, தமது முதலாவது திருப்பலியை இன்று வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் பேராலயத்தில் நடத்தவுள்ளார்.
வத்திக்கானில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது, திருத்தந்தை 14ஆம் லியோ புதிய திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
திருத்தந்தையாக பதவியேற்ற பின் அவர் நடத்தவுள்ள முதலாவது திருப்பலி இதுவாகும்.
இதேவேளை புதிய திருத்தந்தை 14ஆம் லியோவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவின் சிக்காகோவில் பிறந்த ரொபர்ட் ப்ரீவொஸ்ட் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், திருத்தந்தையாக தெரிவான முதலாவது அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்