புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில்
புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதேவேளை, புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை, தற்போதைய முறையைத் தொடர்ந்து அமுல்படுத்தவும் அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளைக் கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்