புதிய கலப்பினச் சோள அறுவடை

-செந்நெல் கிராமம் நிருபர் சிஜாஸ்-

விவசாயத்திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு முன்மாதிரிச் செய்கைக்காக இலவசமாக வழங்கப்பட்ட MI Maize HY-4 புதிய கலப்பினச் சோள அறுவடை ஆரம்ப நிகழ்வு சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி MTM நளீர் தலைமையில் தொழினுட்ப உதவியாளர் MHM இர்ஷாட் ஏற்பாட்டில் இன்று செந்நெல்கிராமத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மறுவயற்பயிர் பாடவிதான உத்தியோகத்தர் SHA நிஹார் , காரியாலய உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விவசாயி கருத்து தெரிவிக்கையில், இதன் மூலம் உச்ச வருமானமாக 01 ஏக்கரிலிருந்து குறைந்தது 05 இலட்சம் பெறக்கூடியதாக இருக்கும் என்றும் இதற்காக சிறப்பாக இயங்கிய சம்மாந்துறை விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.