புதிய ஆடைகள் துவைத்த பின் சுருங்குவதற்கான காரணம் என்ன?
புதிய ஆடைகள் பெரும்பாலும் முதல்முறை துவைத்த பிறகு சுருங்கி விடுவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.
குறிப்பாக பருத்தி மற்றும் லினன் ஆடைகளை நீங்கள் பயன்படுத்துபவர் என்றால் இதை கவனித்திருக்கலாம்.
ஏன் இப்படி நிகழ்கிறது?
காட்டன் மற்றும் லினன் போன்ற இயற்கையான ஃபைபர்ஸ் சுருங்கிய செல்லுலோஸ் மூலக்கூறுகளை (shrunken cellulose molecules) கொண்டிருக்கின்றன.
ஆடை உற்பத்தியின் போது இந்த இயற்கை ஃபைபர்ஸ் மென்மையான நூல்களாக நீட்டிக்கப்படுகின்றன மற்றும் இவை டென்ஷனை உருவாக்குகின்றன.
இந்த டென்ஷன் நெய்யப்பட்ட துணியில் இருக்கும்.
இதனால் காட்டன் மற்றும் லினன் போன்ற ஆடைகள் துவைக்கும் முன் சுருங்காமல் இருக்கும்.
ஆனால் இந்த துணிகள் ஈரப்பதம் அல்லது துவைக்கப்படும் போது, இந்த துணிகளில் அடங்கி இருக்கும் ஃபைபர்ஸ் அவற்றின் இயற்கையான சுருங்கிய நிலைக்குத் திரும்புகின்றன.
இதன் விளைவாக துணியும் சுருங்குகிறது. குறிப்பாக, சூடான நீர் இழைகளின் (fibres) ஆற்றலை அதிகரிக்கிறது. ஹைட்ரஜன் பிணைப்புகளை உடைத்து நூல்களை தளர்வாக்குகிறது.