புதிய அலை கலை வட்டம் நடத்திய கலாமித்ரா விருது விழா
புதிய அலை கலை வட்டம் நடத்திய கலாமித்ரா விருது விழா கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்பு-11, செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
அமைப்பின் நிறுவனரும் கலைஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ராதாமேத்தா நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷன் நிறுவனர் ஹாசிம் உமர் கலந்து கொண்டு, மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தமிழகத்தில் இருந்து இந் நிகழ்வுக்காக வருகை தந்த கெளரவ அதிதி பிரபல தொழில் அதிபர் பி.ஆறுமுகபாண்டியனுக்கு இந் நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மற்றுமெரு கெளரவ அதிதியான தமிழக சூரிய வைத்தியசாலையின் பிராந்திய இயக்குநர் பி.கே. சரவணனுக்கு சமூகக் காவலர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ்விருது நிகழ்வுக்காக நடத்தப்பட்ட கலை கலாசாரப் போட்டிகளில் வெற்றிபெற்ற 25 பேருக்கும், கலை, இலக்கிய துறைசார்ந்த பத்து துறைகளில் தலைசிறந்த 10 பேருக்கு கலாமித்ரா விருதும், சமூக மற்றும் பொது நலப்பணிகளில் பெரிதும் பங்காற்றி வரும் மலையகத்தைச் சேர்ந்த 15 பேருக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மற்றைய கலைஞர்களின் சிறப்பு கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன.








