புதினா இலை பயன்கள்
🟤புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவில் வாசணைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இது அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. அந்தவகையில் எவ்வாறான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
🍀புதினா இலைகளில் மெந்தோல் உள்ளது. இது நெஞ்சு எரிச்சலைப் போக்க உதவுகிறது. மேலும் சளி பிடித்திருக்கும் போது புதினா இலைகளை சாப்பிட்டால் மூக்கு அடைப்பு, தொண்டை கரகரப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.
🍀புதினா இலைகளில் சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது முகப்பருவை குணப்படுத்தவும், பிசுபிசுப்பாக இருக்கும் எண்ணெய் பசை சமருத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
🍀புதினா இலைகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது அதில் ஒவ்வொமை எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதாகவும் இது பல்வேறு வகையான ஒவ்வாமைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் எனவும் கண்டறியப்பட்டது.
🍀புதினா டீ குடிப்பது உங்கள் உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும்.
🍀புதினா எண்ணெயில் மெந்தோல் உள்ளது. இது செரிமான அமைப்பின் பொதுவான கோளாறுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
🍀புதினா இலைகள் இயற்கையில் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டவை, இது உங்கள் வயிற்றில் ஏற்படும் எந்த வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. புதினா இலைகளும் அஜீரணத்தை போக்க உதவுகிறது.
🍀புதினா இலைகளில் பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் சி, டி, ஈ மற்றும் ஏ ஆகியவை நிறைந்துள்ளன, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது உங்கள் செல்களை எந்த சேதத்திலிருந்தும் பாதுகாக்கிறது, இதன் மூலம் எந்த நாள்பட்ட நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
🍀சிலருக்கு சாதாரணமாக வாமிட் பிரச்சனை ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியில் அதிகமாக பயணிப்பதால் வாமிட் ஏற்படும். அதிகமாக வாமிட் எடுப்பவர்கள் புதினா இலைகளை நசுக்கி அந்த இலைகளின் வாசனையை முகர்ந்து வர வாமிட் பிரச்சனை குறையும்.
🍀உணவுகள் சாப்பிட்ட பிறகு வாய் துர்நாற்றம் இல்லாமல் இருப்பதற்கு வாயில் புதினா இலைகளை போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்ற பிரச்சனை இருக்காது. உணவிலிருந்து பற்கள் மற்றும் ஈறுகளின் இடுக்கு பகுதிகளில் தங்கும் கிருமிகளை புதினா இலை சாற்றில் இருக்கும் வேதிப்பொருட்கள் முற்றிலும் அழித்து பற்கள் மற்றும் ஈறுகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
🍀ஒற்றை தலைவலி உள்ளவர்கள் புதினா எண்ணெயினை தலையில் தேய்த்து வர ஒற்றை தலைவலி குணமாகும். மேலும் ஒற்றை தலைவலியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் புதினாவினை அரைத்து நெற்றியில் பற்று போட்டுவர விரைவில் சரியாகும்.
🍀புதினா எண்ணெய் எரிச்சல் கொண்ட குடலிற்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. புதினா குடலில் உள்ள தசைப்பிடிப்பினை குறைத்து குடலில் உண்டாகும் எரிச்சலை சரிசெய்கிறது. தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் சிறிதளவு புதினாவினை எடுத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனை முற்றிலுமாக குணமாகும்.
🍀ஆஸ்துமா என்ற கொடிய நோய் மனிதருடைய நுரையீரல் பகுதியை பாதிப்படைய செய்து சுவாசக்கோளாறு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஆஸ்துமா என்பது ஒவ்வாமை போன்ற நோயாலும் வருகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டுவர மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு விரைவில் குணமாகும்.
புதினா இலை பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்