
புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்!
-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் மஹாகும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
எண்ணெய்காப்பு 21.06.2023 முதல் 24.06.2023 வரை மூல விக்கிரங்களுக்கும் எனைய பரிவார தெய்வதெய்வங்களுக்கு சாத்தப்பட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி முதல் 12 வரை 500 தூண்கள் 5 இராஜ கோபுரங்களுடன் அமைக்கப்பட்ட மிகப் பெரிய ஆலயமான இவ் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.









