கைதிக்கு புகையிலை மற்றும் கையடக்கத் தோலைபேசிகளை கொடுக்க முயன்ற இருவர் கைது

கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் புகையிலை மற்றும் கையடக்கத் தோலைபேசிகளை கொடுக்க முயன்ற பெண் உட்பட இருவர் மாவனெல்லை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணும் 53 வயதுடைய ஆணும் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் ஒரு ஜோடி பாதணிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் புகையிலை மற்றும் 2 கையடக்கத் தோலைபேசிகளை மறைத்து வைத்து சிறைச்சாலை கைதிக்கு கொடுப்பதற்காக சிறைச்சாலைக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பாதணிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 42 கிராம் புகையிலை மற்றும் 2 கையடக்கத் தோலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்டப்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.