புகையிலை பொருட்களுக்காக நாளாந்தம் 520 மில்லியன் செலவு
புகையிலை பொருட்களுக்காக நாளாந்தம் 520 மில்லியன் செலவு
நாட்டில் நாளாந்தம் 520 மில்லியன் ரூபாய், புகையிலை பொருட்களுக்காக செலவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சர்வதேச புகைத்தல் தடுப்பு தினம் மே மாதம் 31 ஆம் திகதி அனுஷ்டிக்கபடுகிறது , இந்த தினத்தை முன்னிட்டு “புகையிலை துறையின் தலையீடுகளை வெளிக்கொண்டுவருவோம்” எனும் தொனிப்பொருளில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் நடைபெற்றது.
அதில் இந்த தொனிப்பொருள், இளைஞர்களை இலக்கு வைத்து செயல்படும் புகையிலை நிறுவனங்களின் சூட்சுமமான விளம்பரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புகைத்தலால் இலங்கையில் ஆண்டுக்கு 20,000 பேர் உயிரிழக்கின்றனர். இது ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளாந்தம் 520 மில்லியன் ரூபாய், புகையிலை பொருட்களுக்காக செலவிடப்படுகின்றது என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.