புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

-பதுளை நிருபர்-

உடுவர மற்றும் ஹாலிஎல இடையிலான புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பதுளை புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை பெய்த கடும் மழையின் காரணமாக 176 கிலோமீற்றர் அருகில் உள்ள ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த 1126 இலக்க கொண்ட புகையிரதம் அவ்விடத்திற்கு சற்று தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த இரவு தபால் புகையிரதத்தில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என பதுளை புகையிரத நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்