புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில் இருந்து சடலம் மீட்பு (படம் இணைப்பு)

-பதுளை நிருபர்-

பதுளை புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில், ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக,  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 75 வயது மதிக்கத்தக்கவர், என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை மூன்று மணியளவில், புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஒருவர் படுத்திருப்பதை அவதானித்த புகையிரத நிலைய பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், குறித்த நபரை எழுப்பிய போது, அவர் எழும்பவில்லை எனவும், பின்னர் அவர் இறந்து விட்டார் என தெரியவந்ததாக, புகையிரத நிலைய அதிகாரி தெரிவித்தார்.

உயிரிழந்த நபர் யாரென அடையாளம் காணப்படாத நிலையில், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்