புகையிரத சேவையில் தாமதம்

புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த புகையிரதமொன்று சீதுவை புகையிரத நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது.

இதன் காரணமாகக் குறித்த மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அலுவலக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதிலும் தாமதம் ஏற்படலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்