Last updated on April 11th, 2023 at 07:58 pm

புகையிரத கடவை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

புகையிரத கடவை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு வாழைச்சேனை புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான 26கடவையில் 78பேர் வேலை செய்கின்றனர், இவர்கள் கடந்த 2013.7.11 ஆம் திகதி பொலிஸ் திணைக்களத்தினால் புகையிரத பாதுகாப்பு கடவை ஊழியர்களாக அமர்த்தப்பட்டார்கள்.

இந்நிலையில் இதுவரை தாங்கள் நிரந்தரமாக்கப்படவில்லை என தெரிவித்தே இவ்வறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் இருந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையம் வரைக்கும் நடைபவனியாக சென்று அங்கு  கோசங்களை எழுப்பினார்கள் .

“நாங்கள் 10வருடங்களாக கடமை செய்கின்றோம், எங்கள் வேலையினை நிரந்தரமாக்கு, எங்களுக்கு நாளொன்றுக்கு 250 ரூபாய் தான் சம்பளம் கிடைக்கின்றது, இன்றைய விலைவாசி நிலையில் இதனை கொண்டே நாம் வாழ்கின்றோம், மிகவும் வறுமைக்கு மத்தியில் எட்டு மணித்தியாலங்கள் தொடர்ந்து இப்பணியை செய்து வருகின்றோம்” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினார்கள் .

தங்களுக்கு மாதாந்தம் கிடைக்கும் 7500ரூபா சம்பளமும் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் ஊடாகத்தான் கிடைப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.

இதன்போது கவனயீர்ப்பு போராட்டகாரர்களினால் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகஜர்கள் வழங்கி தங்களின் வேலையினை நிரந்திரமாக்கி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்