புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டை பகுதியில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த அரியாலையை சேர்ந்த 23 வயது இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையால், கடந்த காலங்களில் பல விபத்துகளும், உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ள போதும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் குறித்து எவ்வித அக்கறையும் கொள்வதில்லை என, மக்கள் தெரிவித்துள்ளனர்.