புகையிரதத்தின் மிதிபலகையில் செல்ஃபி எடுக்க முற்பட்ட சுற்றுலாபயணிக்கு நேர்ந்த கதி
எல்ல – கொழும்பு சுற்றுலா ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் ஒஹியா – இடல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கம்பத்தில் மோதி காயமடைந்துள்ளார்.
இதன்காரணமாக சுற்றுலாப் பயணியான குறித்த 37 வயதுடைய பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நானுஓயாவிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த குறித்த சுற்றுலாப் பயணி, புகையிரதத்தின் கால் பலகையில் செல்ஃபி எடுக்க முற்பட்ட போதே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சுற்றுலாப் பயணி அதே ரயிலில் நானுஓயாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்