புகைப்பிடிப்பதற்கு தடை விதித்த இமானுவேல் மேக்ரான்!

உணவகங்கள், பொது கட்டிடங்களில் புகைப்பிடிப்பதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் (Emmanuel Macron) அரசாங்கம் தடை விதித்துள்ளது.

மேலும், குழந்தைகள் செல்லும் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை, ஜூலை 1 முதல் அமுலுக்கு வருகிறது.

இதேவேளை, இதனை மீறுபவர்களுக்கு சுமார் 130 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன

ஐரோப்பிய நாடான பிரான்சில் புகைப்பிடிக்கும் பழக்கத்தால், நாளொன்றுக்கு 200 பேர் பலியாகின்றனர் என அந்த நாட்டுத் தகவல் தெரிவிக்கின்றன.