பீடி இலைகளுடன் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரங்குளி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரங்குளி, தொடுவாவ வீதியில் சிவில் உடையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கனினால் லொறி மற்றும் கார் என்பவற்றை சோதனையிட்டபோதே, இவ்வாறு பீடி இலைகள் நிரப்பப்பட்ட 78 உர மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.