
பீடி இலைகளுடன் ஒருவர் கைது
கற்பிட்டி – கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த வீட்டில் 9 உரைப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 288 கிலோ கிராம் நிறையுள்ள பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
