பீஜிங்கில் மீண்டும் கொரோனா

சீனத் தலைநகர் பீஜிங்கில்  55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்ப ட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்த எண்ணிக்கை 42ஆக இருந்தது.

அறிகுறி இல்லாமல் வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 17 என்று பதிவாகி உள்ளது. அது முந்தைய தினத்தின் எண்ணிக்கையைப் போல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு.

பீஜிங்கில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மில்லியன் கணக்கான ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைசெய்யும்படி அரசாங்கம் கேட்டுக்கொண்டது. பல ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பாஸ் பாதைகள் அடைக்கப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வேலிகள் போடப்பட்டன.

இதற்கிடையே நிதி மையமான ஷங்ஹாயில் கிட்டத்தட்ட 4,300 பேருக்குக் வைரஸ் தொற்றியுள்ளது. அங்கு வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் குறைவதால், முடக்கநிலை கைவிடப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.