
பிஸ்கட் விற்பனையில் பாரிய வீழ்ச்சி : விலைக்கழிவுகள் வழங்கும் கடைகள்
பிஸ்கட் விலை உயர்வால் பிஸ்கட்டுக்களின் விற்பனை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சில கடைகளில் பிஸ்கெட்டுகளுக்கும் விலைக்கழிவு வழங்கப்படுகிறது.
நுகர்வோர் பிஸ்கட் வாங்குவதை நிறுத்தினால் தமது தொழிற்சாலைகளை மூட நேரிடும், என இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் பிஸ்கட் வாங்குவதை நிறுத்தினால், அவர்கள் தங்கள் தொழிலை நிறுத்திவிட்டு வேலையையும் இழக்க நேரிடும் என்று இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எஸ்.எம்.டி. சூரிய குமார தெரிவித்துள்ளார்.
