பிஸ்கட் கொடுத்தவர் கைது

கொழும்பு விளக்கமறியல்  சிறையிலுள்ள கைதியை பார்வையிடுவதற்காக சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பிஸ்கட் பக்கட்டில் புகையிலை துண்டுகளை மறைத்து வைத்து கைதிக்கு கொடுக்க முயன்றதாக சிறைச்சாலை ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட நபரையும் புகையிலையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.