
பிள்ளையானும் வியாழேந்திரனும் இணைந்து எனது கட்சியின் பெயரை திருடியுள்ளனர் – த.கோபாலகிருஸ்ணன் குற்றச்சாட்டு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்ற கூட்டணிக்கு எதிராக தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் என்பவர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்
“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற பெயர் தனது தலைமையில் உருவாக்கப்பட்ட கட்சியின் பெயர் என்றும் குறித்த கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை தாங்கள் ஏற்கனவே மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது மட்டக்களப்பின் இரண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் இணைந்து தனது அனுமதி இன்றி அந்த பெயரை முறையற்ற விதத்தில் தாங்கள் எடுத்துக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு “என்ற பெயரில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு தானோ அல்லது தனது கட்சியோ பொறுப்பேற்ற மாட்டார்கள் எனவும் அவர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.