
பிள்ளையானின் கைதுக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது இன்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரை பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட இருந்த போது, கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த 7 பேர் கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக, கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கைதுக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.