
பிள்ளைகள் வெளிநாட்டில் : யாழில் மன விரக்தியில் முதியவர் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில், முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த பா.ஜோசப் (வயது 86) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார், அவரது பிள்ளைகள் மூவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர், இந்நிலையில் குறித்த முதியவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
அவரது சடல மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.