பிளே ஓப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது லக்னோ!

-ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று திங்கட்கிழமை லக்னோவில் நடைபெற்றது.

இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தலைவர் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து, 206 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இப்போட்டியில் தோல்வி முடிந்ததன் மூலம் பிளே ஓப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.

இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டி போடுகின்றன.

 

பிளே ஓப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது லக்னோ
பிளே ஓப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது லக்னோ