பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றிற்கு இறக்குமதி தடை

ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தி அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்ரோ உள்ளிட்ட பொருட்கள் சிலவற்றிற்கு இறக்குமதி தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் வெளியானது.

இதன்படி  ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக் பீங்கான்கள், பானக் கோப்பைகள், முள்ளுக்கரண்டிகள்,  கத்திகள் என்பவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படவுள்ளது.

அத்துடன் பிளாஸ்ரிக் இடியப்ப தட்டு, பிளாஸ்டிக் மாலைகள் என்பவற்றை இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்படவுள்ளது.

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக் வகைகளுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது சந்தையில் உள்ள அந்தப் பொருட்களை அகற்றுவதற்கு  மத்திய சுற்றாடல் அதிகார சபை  3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.