பிலிப்பைன்ஸை தாக்கிய புயல்!

மத்திய பிலிப்பைன்ஸ் பகுதிகளை புயல் “கல்மேய்கி” (சில இடங்களில் “டினோ” என அழைக்கப்படுகிறது) இன்று செவ்வாய்க்கிழமை கடுமையாக தாக்கியது.

அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRRMC) தெரிவித்ததாவது – இந்த புயல் தாக்கத்தால் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

புயல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். பல மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, கடல்சார் போக்குவரத்தும் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கடலோரங்களில் 3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் அபாயம் இருப்பதாகவும், “Storm Surge” ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அந்த பகுதியில் பல வீடுகள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவும், அரசு வழங்கும் எச்சரிக்கைகளைக் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.