
பிலிப்பைன்ஸில் போர் விமானம் விபத்து : இருவர் பலி !
பிலிப்பைன்ஸின் மலைப்பகுதியில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் புகிண்ட்னான் மாகாணத்தில் , இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட FA – 50 ரக போர் விமானம் படைத்தளத்திற்கு மீளத் திரும்பவில்லை எனவும் , கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து மாயமான போர் விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றதை தொடர்ந்து, போர் விமானம் புகிண்ட்னான் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது விமானத்தில் பயணித்த 2 வீரர்களும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன .
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
