பிலிப்பைன்ஸில் எரிபொருள் கப்பல் கவிழ்ந்தது: ஒருவர் மாயம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே எரிபொருள் கப்பல் ஒன்று இன்று வியாழக்கிழமை கவிழ்ந்ததுள்ளது.

அந்தக் கப்பலில் சுமார் 15 இலட்சம் லீற்றர் எரிபொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில கிலோமீற்றர் தொலைவுக்கு எரிபொருள் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

“MT Terra Nova” என்ற கப்பல் அதிகாலையில் பிலிப்பைன்ஸின் மத்திய நகரான Iloilo நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கப்பலில் இருந்த 17 ஊழியர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். அதில் நால்வருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன ஊழியர் ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், கடுமையான காற்றும் உயரமான அலைகளும் இடையூறாக உள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் ஜேமி பட்டீஸ்டா தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்