பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே கைது

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே, சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவராவார்.

போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்­காக டுடேர்டே நடத்­திய போராட்­டத்தின் போது 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐக்­கிய நாடு­களின் நீதி­மன்­ற­மான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் (ஐ.சி.சி) இது குறித்து விசா­ரணை நடத்­தியது.

அவருக்கு பிடியாணையும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட டுடேர்டே தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளர்.

கைது சட்டவிரோதமானது எனவும், விமான நிலையத்தில் வழக்கறிஞர்களில் ஒருவரை டுடேர்டேவைச் சந்திக்க பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் டுடெர்ட்டேவின் முன்னாள் சட்ட ஆலோசகர் சால்வடார் பனெலோ தெரிவித்துள்ளார்.