பிலிப்பைன்சில் படகு விபத்து

பிலிப்பைன்சின் தெற்கே பசிலன் மாகாணத்தில் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 13 பேர் பலியானார்கள்.

இதுபற்றி வெளியான தகவலில், அந்த படகு, ஜம்போவங்கா நகரில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவு நோக்கி சென்றபோது விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதில், 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 244 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். படகு விபத்தில் சிக்கியதற்கான காரணம் தெரிய வரவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

அடிக்கடி ஏற்படும் புயல்கள், பராமரிப்பற்ற படகுகள், கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் கடலில் இதுபோன்ற படகு விபத்துகள் ஏற்படுகின்றன.