
பிறைட் ரைஸ் மற்றும் கொத்து போன்றவற்றின் விலை அதிகரிப்பு
தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கருத்திற்கொண்டு அடுத்த சில நாட்களில் உணவின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை உயர்வினால் எதிர்வரும் நாட்களில் பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். .
