
பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை உயரிழப்பு
யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளது.
நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குழந்தையின் தாயார் நேற்று அதிகாலை 2 மணியளவில் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். பின்னர் குழந்தை அதிகாலை 4 மணிக்கு மயக்க நிலையில் இருந்தது.
இந்நிலையில் அளவெட்டி வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றவேளை, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
