பிறந்து 21 நாட்களான சிசு உயிருடன் புதைத்த கொடுரம்!

முந்தல் பகுதியில் பிறந்து 21 நாட்களான சிசுவொன்று இரகசியமான முறையில் புதைக்கப்பட்டமை தொடர்பில் அந்த பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முந்தல் அகுனாவில பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் இணைந்து உயிரிழந்த குறித்த சிசுவை புதைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்