பிறந்தநாள் கொண்டாட நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!

கேகாலை தெலி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்  நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாட வந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் கேகாலையைச் சேர்ந்த அஷான் பிரபோதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர்கள் நீராடச் செல்வதற்கு முன்னர் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பல மணி நேரம் மது அருந்தியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். பின்னர், குழுவினர் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, ​​27 வயதுடைய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் நேற்று பிற்பகல் நீர்வீழ்ச்சியில் இருந்து 1 கிலோமீற்றர் தொலைவில் நீரில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் அடுத்த வாரம் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்