
பிரேசில் விமான விபத்து: 50 பேரின் உடல்கள் மீட்பு
பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வின்ஹெடோ நகரில் வோபாஸ் என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் விமானமொன்று நேற்று விபத்துக்குள்ளானதில் 62 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளானவர்களை அடையாளம் காண மீட்புக் குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
குறித்த விமானம் 57 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் தெற்கு மாநிலமான பரானாவில் இருந்து சாவோ போலோ நகரத்தில் உள்ள புரயசரடாழள விமான நிலையத்திற்குப் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
