பிரியாணி உட்கொண்டதால் உயிரிழந்த சிறுமி
குருணாகல் பகுதியில் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிரியுல்ல பிரதேசத்தில் உணவகம் ஒன்றிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பிரியாணியை மேலும் 3 குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து குறித்த சிறுமி உண்ட நிலையில் அவருக்கு மாத்திரம் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது பிரியாணியால் ஏற்பட்ட ஒவ்வாமையை அடுத்து உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இந்த மரணம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
