பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று வியாழக்கிழமை காலமானார்
பக்கிங்ஹாம் அரண்மனை இதனைத் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய மகாராணி ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்
இந்நிலையிலேயே, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமாகியுள்ளார்.
96 வயதான பிரித்தானிய மகாராணி கடந்த புதன்கிழமை ஒரு மெய்நிகர் ஆலோசனையில் கலந்துக்கொண்டதையடுத்து, அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இதேவேளை, பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது, 1952ஆம் ஆண்டு இவர் பிரித்தானிய மகாராணியான மகுடம் சூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானபோது, அவரது உறவினர்கள் அனைவரும் ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் கூடியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது உடல் இன்று வெள்ளிக்கிழமை லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.