பிரா அணிவதால் கிடைக்கும் நன்மைகள்…..

நாம் ஆடைகளுக்கு எவ்வளவு நேரமும், பணமும் செலவு செய்து தேர்வு செய்கிறோமோ, அதேபோல நல்ல உள்ளாடைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை மார்பக அளவுகள் மாறும். அதே போல, நீங்கள் 2 கிலோ எடை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, மார்பக அளவும் வடிவமும் மாறும்.

உள்ளாடைகள் கச்சிதமாகவும், சௌகரியமாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு விதமான ஆடைகளுக்கும் அதற்கு தகுந்த உள்ளாடை வகைகள் இருக்கிறது. ஆடைகளை தளர்வாக அணிந்தாலும், உள்ளாடைகளை குறிப்பாக பிராவை இறுக்கமாக இருக்குமாறு அணிய வேண்டும். இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கும் : உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் பிராவை அணியும் போது, உங்கள் தோற்றம்  (Posture) மேம்படும். மார்பகங்கள் தளர்வாக தோன்றாமல், உடல் அமைப்பு நேர்த்தியாக இருக்கும். இதுவே உங்கள் உடல் மொழி மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நீங்கள் தளர்வான பிரா மற்றும் இறுக்கமான பிராவை அணிந்து, எவ்வாறு வித்தியாசமாக உணர்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கூடுதல் சௌகரியம் : சரியான பிரா என்பது தோற்றத்தில் மட்டுமல்ல, நல்ல தரத்திலான மற்றும் மென்மையான துணியையும் குறிக்கும். இறுக்கமான மென்மையான துணி பிராவை அணியும் போது, தேவையில்லாமல் மார்பகங்கள் குலுங்காது, இதனால் நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள்.

பிரா அணிவதால் கிடைக்கும் நன்மைகள்.....
பெண்களின் உள்ளாடை தேர்வு

தடையின்றி இயங்க முடியும் : உங்கள் உடல் அமைப்புக்கு பொருத்தமான பிராவை நீங்கள் அணியும் பொழுது வசதியாக உடற்பயிற்சி செய்யலாம்இ வேகமாக வேலைகளை செய்யலாம்இ எந்த விதமான அசௌகரியத்தையும் உணர மாட்டீர்கள். உதாரணமாக இப்பொழுது உங்களுக்கு பொருத்தமில்லாத தளர்வான பிராவை அல்லது அளவில் சிறிய பிராவை நீங்கள் அணியும் பொழுதுஇ மார்பகத்தின் ஒரு பகுதி பிரா கப்பிலிருந்து வெளிப்புறத்தில் இருக்கலாம். இது அசௌகரியமாக இருக்கும். சரியான பொருத்தமாக உள்ள பிராவில் இந்த பிரச்சனைகள் எதுவுமே இருக்காது.

முதுகு மற்றும் தோள்பட்டை வலியை குறைக்கும் : இறுக்கமானஇ சரியான அளவில் தோல்பட்டை பட்டி மற்றும் பின்பக்க பட்டி உள்ள பிரா என்ன செய்யும்? நீங்கள் டைட்டான அல்லது லூசான பிரா பட்டியை போட்டுக் கொண்டால் முதுகு மற்றும் தோள்பட்டையில் வலிக்கும். குறிப்பாகஇ தோள்பட்டையில் சரியாக பட்டி போட்டுக்கொள்ளவில்லை என்றால், முதுகு வலி ஏற்படும், வசதியாக உணர மாட்டீர்கள். இதுவே, உங்களுக்கு பொருந்தும் பட்டிகள் கொண்ட  ஃபிட்டிங் பிராவில் இந்த பிரச்சனை இருக்காது.

அசத்தல் தோற்றம் : ஒரு பிராவை சரியாக தேர்வு செய்து பொருத்தமாக அணிவதன் மூலம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. மேலும், உங்கள் தோற்றமும் மிளிரும், சரியான பிராவை அணியும் பொழுது மார்பகங்கள் தளர்வாக தெரியாமல், தோற்றம் மேம்படுத்தப்பட்டு, எடுப்பாகத் தெரியும். அது மட்டுமல்லாமல் நீங்கள் அணியும் ஆடைகளுக்கு ஏற்ப உங்களுடைய உடலமைப்பு அசத்தலாக உங்கள் தோற்றத்தை வெளிப்படுத்தும். சேலை அணியும் போதும் சரி வெஸ்டர்ன் டாப்ஸ் அணியும் போதும் சரி, பிரா பொருத்தமாக இல்லையென்றால் எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்!

ஒவ்வொரு விதமான ஆடைகளுக்கும் அதற்கு தகுந்த உள்ளாடை வகைகள் இருக்கிறது. ஆடைகளை தளர்வாக அணிந்தாலும், உள்ளாடைகளை குறிப்பாக பிராவை இறுக்கமாக இருக்குமாறு அணிய வேண்டும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்