பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார்.

இந்தநிலையில், பிரான்ஸில் நேற்று  ஞாயிற்றுகிழமை  அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.

அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பட்ஜெட்டை அடுத்த வருடம் தாக்கல் செய்வதற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார்.

இந்தநிலையில்தான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.