பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி பலகோடி ரூபா மோசடி செய்தவர் கைது!

-யாழ் நிருபர்-

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் ஒருவர் 7 வருடங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்துவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரியபண்டாரவின் கீழ் இயங்கும் மாவட்ட விஷேட குற்ற விசாரனை பிரிவின் பொறுப்பதிகாரி ஜி.குணரோயன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வைகாசி மாதம் கிடைக்கபெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்இ பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டஇ ஒட்டுமடம் தேவாலய வீதியை சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் விஷேட குற்ற விசாரனை பிரிவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த ஏழாம் மாதம் ஒருவரும், பத்தாம் மாதம் ஒருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொழுது, பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி பிரதான முகவராக செயற்பட்டு, விடுதிகளில் தங்கியிருந்து பண மோசடிகள் செய்ததாகவும் மற்றும் கொழும்பில் தங்கியிருந்து ஆடம்பரவாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் தெரியவந்தது.

இவருக்கு 2017ம் ஆண்டு மல்லாகம் நீதிமன்றில் பகிரங்க பிடியாணையும் பிறப்பிக்கபட்டிருந்ததுடன், வவுனியா நீதவான் நீதிமன்றில் 1கோடி 29 இலட்சம் ரூபா மோசடி வழக்கில் தேடப்படும் பிரதான குற்றவாளியாக காணப்படுகின்றார் என்பதுடன், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் 27இலட்சத்து 50ஆயிரம் பணமோசடியில் தேடப்படும் சந்தேக நபராகவும் உள்ளார்.

இந்த சந்தேக நபருக்கு எதிராக வவுனியா, மல்லாகம், யாழ்ப்பாணம் போன்ற நீதிமன்றில் 3 கோடியே 50ஆயிரம் பணமோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இவருக்கு எதிராக குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கு பதிவு செய்து யாழ்ப்பணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொழுது இவரை எதிர்வரும் 13திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் கொளரவ நீதிபதி ஆனந்தராஜா அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக குறி பண மோசடி சம்பந்தமான முறைப்படு நூறுக்கு மேற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் வெளிநாடு செல்லும் மோகத்தினால் பதிவுசெய்யபடாத வேலைவாய்பு பணியகத்தில் பதியபடாத முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஏத்தனையோ பேர் ஆதாரங்கள் இல்லாமல் முறைப்பாடு பதிவு செய்யாமல் உள்ளார்கள், எனவே அவதானமாக இருக்குமாறு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் விஷேட குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் கேட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்