பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத உணவுகள்
பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத உணவுகள்
பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத உணவுகள்
⭕பிரஷர் குக்கரில் உணவு விரைவாக சமைக்கிறது. இது வேலையை சுலபமாகியுள்ளதால், பெரும்பாலான மக்கள் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் பிரஷர் குக்கர் உள்ளது. இந்த பிஸியான வாழ்க்கையில் எதற்கும் நமக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. குறிப்பாக சமைப்பதற்கு. அதாவது, சாதம் வடிக்க, உருளைக்கிழங்கு வேக வைப்பது, பருப்பு சமைப்பது என ஏதுவான இருந்தாலும் குக்கரில் போட்டால் எளிதாக வெந்துவிடும். இது சமையலை மிகவும் எளிதாக்குகிறது. ஆனால் சில உணவுகளை அதில் சமைக்காமல் தவிர்க்க வேண்டும். பிரஷர் குக்கரில் சில வகையான உணவுகளை சமைப்பது உடல் நலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
⭕பிரஷர் குக்கர் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. ஆனால் அதில் அனைத்து உணவுப் பொருட்களையும் சமைக்கக் கூடாது என்பதை மறுக்க முடியாது. இதைச் செய்வது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். பிரஷர் குக்கரில் சமைக்கும்போது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
மீன்
📍பிரஷர் குக்கரில் மீன்களை சமைப்பதால், அதில் உள்ள ஒமேகா 3 ஃபாட்டி ஆசிட்கள் அழிக்கப்படுகின்றன. எனவே மீனை சாதாரணமாக சமைப்பது அல்லது குறைந்த தீயில் சமைப்பது ஆரோக்கியமானது.
அரிசி
📍பொதுவாக எல்லா வீடுகளிலும் அரிசி குக்கரில் சமைக்கப்படுகிறது. ஆனால் இப்படி செய்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். குக்கரில் அரிசியை சமைப்பதால் அரிசியில் இருந்து வெளியாகும் ஸ்டார்ச், ஒரு ரசாயனத்தை உருவாக்குகிறது, இது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், அரிசியை குக்கரில் வைப்பதால் அரிசியில் உள்ள தேவையற்ற அதீத கொழுப்புகள் அரிசியிலேயே தங்கி விடுகின்றனர்.
காய்கறிகள்
📍பிரஷர் குக்கரில் காய்கறிகளை சமைப்பதால் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். இதற்கு காரணம் அதன் அதிக வெப்பநிலை ஆகும். மேலும், பிரஷர் குக்கரில் சமைக்கப்படும் காய்கறிகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
உருளைக்கிழங்கு
📍பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை சமைப்பது உடல் நலத்திற்கு கேடு. நம்மில் பலர் உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் வேகவைக்கிறோம். ஏனெனில் அதைச் செய்வதற்கான எளிதான மற்றும் விரைவான வழி. இருப்பினும், உருளைக்கிழங்கில் மாச்சத்து உள்ளதால், அதை குக்கரில் சமைக்கப்படக்கூடாது. பிரஷர் குக்கரின் அதிக வெப்பநிலை அவற்றின் ஊட்டச்சத்துக்களை குறைக்கிறது. இது தவிர, வேகவைத்த உருளைக்கிழங்கில் அதிக அளவு ஆன்டி-நியூட்ரியன்கள் இருப்பதால் உடலுக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்காது.
கீரை
📍பிரஷர் குக்கரில் கீரையை சமைத்தால் அதில் உள்ள ஆக்சலேட்டுகளை மேலும் கரைக்க முடியும். இது சிறுநீரக கற்களை உண்டாக்குகிறது. பொதுவாக கீரை சமைக்கும் போது, வெப்பநிலை எப்போதும் குறைவாக இருக்க வேண்டும். மேலும், அதன் சத்துக்கள் பாதுகாக்கப்படுவதற்கும், உடலுக்கு தீங்கு விளைவிக்காததற்கும் அதிக தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பிரஷர் குக்கரில் கீரை மிக விரைவாக வெந்துவிடும். இதன் விளைவாக ஒரு மிருதுவான அமைப்பாக அது மாறிவிடும்.
பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத உணவுகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்