பிரபல பாடகர் உஸ்தாத் ரஷித் கான் புற்றுநோயால் உயிரிழப்பு

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் உஸ்தாத் ரஷித் கான் தனது 55ஆவது வயதில் காலமானார்.

உஸ்தாத் ரஷித் கான் கடந்த சில நாட்களாக கொல்கத்தாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உஸ்தான் ரஷித் கானின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, அவரது இறுதி சடங்கில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரச மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.