பிரபல தென் கொரிய நடிகர் லீ சுன்-கியூன் மர்மமான முறையில் உயிரிழப்பு

பிரபல தென் கொரிய நடிகர் லீ சுன்-கியூன் (வயது 48) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் ஒஸ்கார் விருது வென்ற பாரசைட் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவராவார்

மத்திய சியோலில் உள்ள ஒரு பூங்காவில் அவர் தனது காருக்குள் இன்று புதன்கிழமை உயிரிழந்து கிடந்ததாக தென் கொரிய அவசரகால சேவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

நடிகர் லீ சுன்-கியூனின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

லீ சுன்-கியூன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மன வருத்தத்தில் இருந்த நடிகர் லீ சுன்-கியூன் தற்கொலை குறிப்பு போன்ற ஒரு தகவலை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது குடும்பத்தினர் கூறியதையடுத்து அவரை பொலிஸார் தேடி வருகிறார்கள் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில்இ அவர் காருக்குள் சடலமாக கிடந்ததால்இ தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.