பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாக்கு விபத்து

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநராகவும் சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா.

அவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘கில்லர்’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி, நடித்து வருகிறார்.

இந்தநிலையில் அந்த திரைப்படத்தின் முக்கியமான சண்டை காட்சியைப் படமாக்கி கொண்டிருந்தபோது, கயிற்றால் கட்டப்பட்டு எஸ்.ஜே.சூர்யா சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கயிற்றில் தொங்கிய எஸ்.ஜே.சூர்யா வேகமாக அங்கும் இங்கும் சுழன்று, கீழே இறங்கியதில், அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி அவரது காலை கிழித்துள்ளது.

அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 2 கால்களிலும் தையல்கள் போடப்பட்டுள்ளன. அவரை 2 வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.