பிரன்ட்ஸ் மெகா மின்னொளிப் போட்டியில் சம்பியனானது கல்முனை பெஸ்ட் இலவன் விளையாட்டுக் கழகம்

சம்மாந்துறை ப்ரண்ட்ஸ் பௌண்டஷன் அமைப்பின் ஏற்பாட்டில், ஐந்து நாட்களாக நடைபெற்ற பிரண்ட்ஸ் மெகா மின்னொளிப் போட்டி 2025, சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்தது.

இந்த போட்டித் தொடரில், மொத்தம் 56 அணிகள் பங்கேற்றிருந்தனர். பல திறமையான அணிகளை தோற்கடித்து, கல்முனை பெஸ்ட் இலவன் விளையாட்டுக் கழகம் மற்றும் அட்டாளைச்சேனை அல் நஜா விளையாட்டுக் கழகம் ஆகியவை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.

இறுதிப் போட்டியில் கல்முனை பெஸ்ட் இலவன் விளையாட்டுக் கழகம், அட்டாளைச்சேனை அல் நஜா விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி, 2025 ஆம் ஆண்டுக்கான பிரண்ட்ஸ் மெகா மின்னொளிப் போட்டியின் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இப்போட்டியின் இறுதிநாளில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளருமான அமீர் அப்னான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, சாம்பியன் மற்றும் இரண்டாம் நிலை சாம்பியன் ஆகிய அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பணப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.