பிரதேச செயலக ஊழியருக்கு அதிக பெற்றோல் வழங்கியதால் கை கலப்பு

பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு அதிகமாக பெற்றோல் வழங்கியதால் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை முற்பகல் காரைநகர் வலந்தலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு அதிகமாக 3000 ரூபாவிற்கு பெற்றோல் நிரப்பியதையடுத்து அங்கு கூடியவர்களுக்கும் பிரதேச செயலக பணியாளருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸார் வருகை தந்து எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர்.