பிரதேச செயலகத்திற்கு முன்னால் வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

பதுளை மாவட்டம் எல்ல பிரதேச செயலகத்தில் சேவை பெறச் சென்ற நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

நமுனுகுல பகுதியைச் சேர்ந்த ராமையா குழந்தைவேலு (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பப்டிவம் பெறுவதற்காக பிரதேச செயலகத்தின் முன்னால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அங்கு வரிசையில் நின்ற சிலர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.